INT. CELL - MINOR JAIL - NIGHT
ஜெயில் கம்பிகளை பிடித்து சிறுவர்கள். சட்டை கிழிந்து, மொட்டை தலைகள். கண்களில் வெறுப்பு, சோகம், தனிமை, மிரட்சி.
பையன் உள்ளே தள்ளபடுகிறான். பின்னால் கதவு அறைகிறது.
[பையன்]
(தேம்பல்)
அம்..மா.
பின்னால் கம்பியில் சரிந்து, கதறுகிறான். சிறுவர்கள் அலட்சியமாய், தரையில் பேபர், கோணிகளில் ஜீவனில்லாமல்.
சுவர் மூலையில் பாட்ஷா, 11 வயது, மொட்டை தலை, எழுகிறான். சிறுவர்கள் மேல் இடித்தபடி பையனை நோக்கி வருகிறான். சற்று தொலைவில் தரையில், மொட்டை வாயை பிளந்து தூங்குகிறான். அருகே பீடி கட்டு. பாட்ஷா பீடியை எடுக்க குனிகிறான்.
மொட்டை பாட்ஷா மேல் பாய்கிறான். இருவரும் தரையில் சிறுவர்கள் மேல் உருண்டு சண்டை. சிறுவர்கள் அலறியடித்து ஓடுகிறார்கள். பாட்ஷா, மொட்டையை சுவரில் மோதுகிறான். மொட்டை பாட்ஷா முகத்தை பேற்கிறான். பாட்ஷா, பையன் மேல் விழுகிறான். பீடி கட்டு பையன் அருகில் விழுகிறது.
சிறுவர்கள் ஒருவரை ஒருவர் அடித்து அமளி. சட்டை கிழிகிறது. ட்ராயர் அவிழ்கிறது. கூச்சல். பையன் பீடி கட்டை வெறித்தபடி கம்பியை பிடித்து விசும்புகிரன்.
"நங் நங் நங்". சிறுவர்கள் சைலன்டாய் உட்காருகிறார்கள். கம்பி பின்னால், வொயிட் யூனிபார்மில் மொட்டை தலை[உஸ்சு], கையில் லட்டியுடன்.
பையன் கம்பியை ஒட்டி கத்றியபடி. எதிரே பீடிகட்டு.
"டுக்".
லட்டி பையன் தொண்டையை பேற்கிறது. பையன் தொண்டையை பிடித்து கீழே சரிகிறான். உஸ்சு இளித்தபடி திரும்பி நடக்கிறான். பையன் தரையில் மல்லாந்து, கண்ணீர் மல்க, மேலே வெறித்து அசையமால் நடை பிணமாய் கிடக்கிறான்.
DISSOLVE TO:
கண்கள். இமைக்காமல் வெறித்தபடி. பையன், தரையில்.
"நங் நங் நங்". உஸ்சு கையில் லட்டியோடு ஜெயில் உள்ளே ஸ்கேன் செய்கிறான். சிறுவர்கள் எதிரே வெறித்தபடி. உஸ்சு லட்டியை தரையில் தேய்த்து திரும்பி விசிலடித்தபடி நடக்கிறான். சிறுவர்கள் மெதுவாய் உஸ்சை பார்த்தபடி எழுகிறார்கள்.
விசில் நிற்கிறது. உஸ்சு திரும்பி சிறுவர்களை மொறைக்கிறான். சிறுவர்கள் சைலன்டாய் உட்காருகிறார்கள். மொட்டை இளித்தபடி மெதுவாய் விசிலடித்தபடி திரும்பி மறைகிறான். மறுவினாடி சிறுவர்கள் ஜெயில் கம்பியில் ஒரே நேரத்தில் முட்டுகிறார்கள். பையன் முகத்தில் கால்கள் இடற, அமளி. இரைச்சல்.
[கம்பிகளின் வெளியே]...
கம்பியின் நடுவே கைகள் கூடைக்காக அலைகிறது. கைகளுக்கும் கூடைக்கும் ஒரு இன்ச் இடைவெளி. கம்பிகள் சிறுவர்கள் இடியில் குலுங்குகிறது. கைகள் கூடையை பிடிக்க, அலைகிறது.
[ஜெயில் செல்லில்]...
சிறுவர்கள் கம்பியில் முட்டி மோதுகிறார்கள். பையன் முகம் தரையில் தேய்ந்து, நெற்றியில் ரத்தம் வழிகிறது. சிறுவர்கள் இடித்து, உதைத்து, கம்பியின் வெளியே கூடையை இழுக்க, ரகளை. பையன், சிறுவர்கள் கீழே, அசையாமல் ரத்த்ம் வழிய.
பையன் கால்களை பிடித்து, பாட்ஷா பையனை கும்பலிலிருந்து வெளியே இழுக்கிறான்.
[கம்பிகளின் வெளியே]...
கூடை கைகள் இடித்து கீழே விழுகிறது. கூடையிலிரிந்து நசிந்த பொறைகள் கீழே இறைகிறது. சிறுவர்கள் பொறைகளுக்கு மோதுகிறார்கள்.
SLOW DISSOLVE TO:
கம்பிகள் வெளியே, ஒரே பொறை தனியாய். பையன் கண்கள் திறக்கிறான். வாய் துடிக்கிறது. மெதுவாய் கம்பியை நோக்கி தவழ்கிறான்.
[கம்பிகளின் வெளியே]...
பையன் கையை வெளியே பொறைக்காக நீட்டுகிறான். பொறைக்கும் கைக்கும் சில இன்ச். கைகள் துடிக்கிறது. கைகள் இன்ச் பை இன்சாக தூரம் குறைக்கிறது. கை பொறையில். விசில். உஸ்சு விசிலடித்தபடி பையன் கையை மிதிக்கிறான்.
[பையன்]
(நாக்கு உலர்ந்து)
பொ.. ப்பொ...
உஸ்சு காலால், பொறையை தரையில் உருட்டி விளையாடுகிறான். பையன் உஸ்சு கால்களை பிடிக்கிறான். "க்ளக்". லட்டி பையன் கைகளை உடைக்கிறது.
[பையன்]
ஆஆஆ...
உஸ்சு இளிக்கிறான். லட்டியை திரும்ப ஓங்கி அடிக்கிறான்.
"டப்".
பாட்ஷா லட்டியை தடுத்து உள்ளே இழுக்கிறான். லட்டி பாட்ஷா கையில். உஸ்சு லட்டியை பிடிக்க கைகளை கம்பிகள் உள்ளே.
"க்ளக்".
லட்டி உஸ்சு கைகளை பேற்கிறது. பாட்ஷா கையில் லட்டி. உஸ்சு பாட்ஷாவை எரிக்கிறான்.
"நங் நங் நங்".. பாட்ஷா லட்டியை கம்பிகளில் இடித்து விளையாடியபடி, உஸ்சை நக்கலடிக்கிறான்.
Saturday, October 4, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment