EXT. LUNCH HALL - MINOR JAIL - DAY
சிறுவர்கள் வரிசையாய் உட்கார்ந்திருக்கிறார்கள். அகரன் எதிரே அலுமினிய தட்டு. தட்டில் களி. கண்களில் கண்ணீர் முட்டுகிறது.
"ப்ச்க்".
அகரன் மூஞ்சியில் களி அப்புகிறது. வார்டன் லாலிபாப் சப்ப இளிக்கிறான். அருகே உஸ்சு. சுற்றி இருக்கும் சிறுவர்கள் பயத்துடன் சாப்பிடுகிறார்கள்.
[வார்டன்]
(லாலிபாப்பை நீட்டி)
சப்றியா?
அகரன் வார்டனை முறைக்கிறான்.
[வார்டன்]
(லாலிபாப்பை அகரன் தலையில் தட்டியபடி)
ஊர் எச்சி துன்ற.. த்து கசக்தா?
அகரன் வார்டனை முறைக்கிறான். வார்டன் ஊஸ்சை பார்த்து கண்ணடிக்கிறான். உஸ்சு கையிலிருக்கும் பக்க்ட்டிலிருந்து களி எடுத்து அகரன் முன்னே தரையில் போடுகிறான்.
[வார்டன்]
ஒன்னு வுடாம.. நக்கு.
அகரன் வார்டனை முறைக்கிறான்.
[வார்டன்]
பகல்லியே பட்டைய களப்ளாம்.. எப்டி வசதி?
அகரன் வார்டனை முறைத்தபடி களியில் கை வைக்கிறான். வார்டன் இளித்தபடி லாலிபாப்பை களியில் போடுகிறான்.
[வார்டன்]
ப்ப துன்னு.
அகரன் வார்டனை முறைக்கிறான்.
[வார்டன்]
எங்க ஓன் புருசன்? பொய்ட்டானா?
வார்டன் பிணம் போஸ் கொடுத்தபடி அட்டகாசமாய் சிரிக்கிறான். உஸ்சு இளிக்கிறான். சிரிப்பு சத்தம் ஜெயிலில் அலை அடிக்கிறது.
"ப்சக் ப்சக்".
வார்டன் மூஞ்சியில் களி அப்புகிறது.
அமைதி.
வார்டன் ஒரு வினாடி நிலை குலைய, மறு வினாடி அசுரனாகிறான். பாய்ந்து அகரனை அள்ளுகிறான்.
[அகரன்]
(முறைத்தபடி)
நீ தின்டா ஒம்போது.
வார்டன் அகரனை தூக்கி வீசுகிறான். அகரன் பின்னால் சுவரில் மோதி விழுகிறான். வார்டன் உஸ்சை முறைக்கிறான். உஸ்சு லட்டியால் சிறுவர்களை விரட்டி அடிக்கிறான். வார்டன் கீழே கிடக்கும் பக்கெட்டை தூக்கி அகரனை நோக்கி ஓடுகிறான்.
Saturday, October 11, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment