INT. CELL – MINOR JAIL - DAY
சிறுவர்கள் தரையில் குப்பைகளாய் சிதறி. மூலையில் சிறுவன் முழங்காலில் முகம் புதைத்து.
கதவு அட்டகாசமாய் அலற, பாட்ஷா உள்ளே வந்து விழுகிறான். பாட்ஷா முகம் வீங்கி, விகார்மாய் அடையாளம் தெரியாமல். கதவில் உஸ்சு இளிக்கிறான். கதவு மூடுகிறது.
சிறுவன் ஓடி, பாட்ஷாவை தூக்கி மடியில். பாட்ஷா உயிர் ஊசல். சிறுவன் கதறுகிறான். பாட்ஷா ரத்தம் தோய்ந்த கையுடன் சிறுவன் முகத்தை வருடுகிறான். சிறுவன் அழுகை அடங்காமல் அதிகமாகிறது. பாட்ஷா சிறுவன் கழுத்தில் ருத்ராஷ கொட்டையை வருடுகிறான். சிறுவன் விக்கி அழுகிறான்.
பாட்ஷா முகம் கோண பேச உதடு துடிக்கிறது. முடியவில்லை. பாட்ஷா முகம் கோணி அழுகிறான்.
[பாட்ஷா]
(உஸ்சை காட்டி)
பே.. பே
பேச்சு வரவில்லை. பேச நாக்கு இல்லை.
[பாட்ஷா]
பே.. பேபேஏஏஏஏ...
பாட்ஷா பேச முடியாமல் கூச்சலிடுகிறான். கதவை காட்டி அலறுகிறான். சிறுவன் பாட்ஷாவை கட்டி கத்றுகிறான்.
அழுகை. கதறல். ஜெயில் அழுகிறது. உலகம் அழுகிறது.
அமைதி.
பாட்ஷா கண்கள் சிறுவன் மேல் நிலைக்கிறது. மூச்சு நிற்கிறது.
சிறுவன் அதிர்ந்து பாட்ஷாவை வெறிக்கிறான். விசும்பல் நின்று, முகம் சிவப்பேற ஜெயில் கதவை முறைக்கிறான்.
பாட்ஷா சிறுவன் கழுத்தில் உட்ராச்ச கொட்டையை பிடித்து பிணமாய் கிடக்கிறான்.
சிறுவன் முகம் இறுகி, ரத்தம் ஏறி கதவை முறைத்தபடி "அகரன்" ஆகிறான்.
Saturday, October 11, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment