INT. ROOM - MINOR JAIL - EVENING
பல வருடங்களுக்கு முன்னால்..
சேரில் வார்டன், வாயில் லாலிபாப், காக்கி ட்ராயர் மேல் வெள்ளை கோட்டில் ரோஜா. பையன் இவன் கால்களில் வந்து விழுகிறான்.
[வார்டன்]
வெல்கம் பிகரு.. வெல்கம். லுக்கு வுட்டு வுட்டு.. ஐசில்லாம் தண்ணியா போச்சு.
பையன், கைகளில் ஹேன்ட்கப், தலையில் ரத்தம்.. விசும்புகிறான்.
[வார்டன்]
(லாலிபாப்பை நீட்டி)
சப்றியா?
[பையன்]
(விசும்புகிறான்)
ம்..மா.
[வார்டன்]
(ரோஜாவை காட்டி)
கொள்ன்திங்னா, லட்டு மாறி, பா.
எழுந்து பையனை தூக்கி, "பளார்". ரோஜா கீழே விழுகிறது.
[பையன்]
(முனகல்)
ம்மா.
[வார்டன்]
தக்ராரு பன்ண, ட்ரவுசர் கலன்ட்ரும்.
பையன் பாதி உயிர் காலி. வார்டன் ரோஜாவை ரசித்து முகர்கிறான்.
[வார்டன்]
(ரோஜாவை முகர்ந்தபடி)
புது பொண்ணுங்க்ள ரோசு குட்து வெல்கம் பண்றது ந்த வூட்டு பாலிசி.
(லாலிபாப்பை பையன் தலையில் தட்டி)
ரெடியா?
இளித்தபடி ரோஜாவை கசக்கி பையன் மூஞ்சியில் அடிக்கிறான்.
பையன் கதறல் அதிகமாகிறது.
Monday, September 29, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment