Sunday, February 15, 2009

EXT. AMBULANCE – MARINA - DAY

EXT. AMBULANCE – MARINA - DAY

[கும்பல்]
(கோஷம்)
காவல்துறை, ஒழிக.. காவல் துறையை, கைது செய். அஞ்சா நெஞ்சனை, விடுதலை செய்.

ஆம்புலன்ஸ் உள்ளே ஸ்ட்ரெச்சரில் ரத்தம் தோய்ந்த கழுத்துடன் அகரன் மயக்கமாய். ராஜிவ் நெற்றி வேர்வையை துடைத்தபடி அகரனை பார்த்தபடி. ரிவால்வரை இடுப்பில் உறையில் சொறுகுகிறான்.

[கும்பல்]
(கோஷம்)
காவல் துறையை, கைது செய். அஞ்சா நெஞ்சனை, விடுதலை செய்.

101, 202 கான்ஸ்டபில்ஸ் இருவரும் ராஜிவிடம் ஓடி வந்து "ஓகே" என்று தலை அசைக்கிறார்கள். ராஜிவ் கும்பலிடம் திரும்புகிறான். கும்பலில் ஒல்லி கச்சி கொடியை அசைத்தபடி கோஷமிடுகிறான்.

[ராஜிவ்]
(ஒல்லியிடம், தன்மையாக)
கலைஞ்சு போங்க ப்ளீஸ்.. ஆம்புலன்ஸ் ஆஸ்பிடல் போலனா, உயிர் போய்டும்.

[ஒல்லி]
போட்டும். தலைவனுக்காவ எத்தினை உயிர் வேணா காணிக்யியா குடுக்க தயார்.
(கோஷம்)
வீரத் தலைவன், வாழ்க. அமைதிக் காவலன், வாழ்க.

ராஜிவ் கண்கள் இறுகி, கை வேகமாய் ரிவால்வரை பற்றுகிறது. கும்பல் பரபரக்கிறது. ஒல்லி தலை அசைக்கிறான். கும்பலில் ஒருவன் கீழே கிடக்கும் கருங்கல்லை எடுத்து வீசுகிறான்.

“டுப்”.

கல் ராஜிவ் நெற்றியை கிழிக்கிறது. ராஜிவ் நிலை தடுமாற, ரிவால்வர் வெடிக்கிறது.

“டுமில்".

ஒல்லி கச்சி கொடியை கீழே போட்டு கூட்டத்தில் புரண்டு எழுந்து ஓடுகிறான். ராஜிவ் சூதாறித்து, ஓடும் கூட்டத்தை முறைத்தபடி, ஒரு கையில் ரத்தம் வழியும் நெற்றியை பிடித்தபடி, மறு கையில் ரிவால்வரை வானத்தை நோக்கி, ட்ரிக்க்ரை அழுத்துகிறான்.

“டுமில்".

கும்பல் அலறி அடித்து ஓடுகிறது.


INT. AUTO – MARINA - CONTINUOUS

[துர்கா]
வாவ், கன் ஷாட்!

கூட்டம் அலறி அடித்து ஓடி வருகிறது. துர்கா செல்லை எடுத்து, ஆட்டோவிலிருந்து கீழே குதித்து, கூட்டத்தை எதிர் நோக்கி ஓடுகிறாள்.

[ரவி]
(அலறுகிறார்)
வேணாம், கேப்டன். நில்லு...

துர்கா கூட்டத்தில் இடறி, முண்டி அடித்து, எதிர்த்து ஓடுகிறாள். ரவி கால் கட்டையை எடுத்து துர்காவை பிடிக்க பின்னால் ஓட, இல்லை கஷ்டபட்டு ஓட முயல்கிறார். எதிர் புறமாய் வரும் கும்பல், ரவியை இடித்து கீழே தள்ளுகிறது.



EXT. AMBULANCE – MARINA - CONTINUOUS

கும்பல், கலைந்து ஓடுகிறது. ராஜிவ் ஆம்புலன்ஸ் உள்ளே ஏறி, அகரன் பல்ஸ் செக் செய்கிறான். வேகமாய் கீழே குதிக்கிறான். 101, 202 இருவரும் ஆம்பலன்ஸ் பின் கதவை மூடுகிறார்கள். பெரிய ப்ளூ கலர் போலிஸ் வேன், போலிஸ் ஜீப் அருகே வந்து நிற்கிறது. வேன் பின் கதவை திறந்து, ரிசர்வ் போலிஸ் குதிக்கிறார்கள்.

[ராஜிவ்]
(கான்ஸ்டபிளிடம்)
ஸ்டே இயர்.

[101]
(ராஜிவ் நெற்றியை காட்டி)
ரத்தம்...

ராஜிவ் வெள்ளை கர்சிபை எடுத்து நெற்றியில் கட்டுகிறான். வெள்ளை கர்சீப் இன்ஸ்டன்ட் சிவப்பாகிறது.

[ராஜிவ்]
(கான்ஸ்டபிளிடம், ஆம்புலன்சை காட்டி)
நகராதிங்க.

101, 202 தலை அசைக்கிறார்கள். ராஜிவ் ஆம்புலன்சை விட்டு, ரிசர்வ் போலிசை நோக்கி ஓடுகிறான்.



INT. AUTO – MARINA - CONTINUOUS

கும்பல் அலறி அடித்து ஓடுகிறது. கும்பலை எதிர்த்து, ஆட்டோ நகர்கிறது.

[ரவி]
(கத்தல்)
கேப்டன்.. கேப்டன்...



EXT. ROAD – MARINA - CONTINUOUS

துர்கா, கும்பலை எதிர்த்து தடுமாறி ஓடுகிறாள்.

“டுப்".

துர்கா, கீழே விழுகிறாள். செல் எகிறி சற்று தள்ளி விழுகிறது. செல்லில் பூபதி சிரிக்கிறார்.

“ப்சக்".

செல் நசுங்க, கூட்டம் செல்லை மிதித்து ஓடுகிறது. துர்கா பாய்ந்து செல்லை எடுக்கிறாள். கும்பல் இடிபட கஷ்டபட்டு எழுகிறாள். கையில் நசுங்கிய செல்.

[துர்கா]
(செல்லை பார்த்து)
ஷிட்.

செல்லை தூக்கி ரோட்டில் வீசுகிறாள். கும்பல் செல்லை நசுக்கி ஓடுகிறது.



EXT. AMBULANCE – MARINA - CONTINUOUS

ரிசர்வ் போலிஸ் கும்பலை லட்டியால் விரட்டி அடிக்கிறது. கும்பல் சிதறி ரோட் க்ளியர் ஆகிறது. ராஜிவ் கும்பலை விரட்டியடித்தபடி, ஆம்புலன்ஸ் பக்கம் திரும்புகிறான். ஆம்புலன்ஸ் பின் கதவு மூடியபடி, தனியே நிற்கிறது. ராஜிவ் ஆம்ப்லன்சை உற்று பார்க்கிறான்.

[ராஜிவ்]
(முணுமுணுப்பாய்)
ஷிட்.

ராஜிவ் கும்பலை விலக்கி, ஆம்புலன்சை நோக்கி ஓடுகிறான். ஆம்புலன்ஸ் தனியே அனாதையாய். ராஜிவ் வேகமாய் பாய்ந்து ஓடி வருகிறான். ராஜிவ் ஆம்புலன்ஸ் அருகே வர, அதே நேரத்தில் 101, 202 இருவரும் ஓடி வந்து ராஜிவ் எதிரே நிற்கிறார்கள்.

[ராஜிவ்]
(கத்தல்)
ஓபன் த டேம் டோர்.

101, 202 இருவரும் ராஜிவ் அலறல் புரியாமல் முழிக்கிறார்கள். ராஜிவ் கான்ஸ்டபில்சை விலக்கி, பாய்ந்து ஆம்புலன்ஸ் பின் கதவை திறக்கிறான்.

[ராஜிவ்]
ஷிட்.

ஆம்புலன்ஸ் ஸ்ட்ரெச்சர் காலியாய்.

அகரன் மிஸ்ஸிங்.

ராஜிவ் தலையில் ரத்தம் தோய்ந்த கர்சீபை கழ்ற்றி வெறுப்பாய் தரையில் வீசுகிறான். 101. 202 இருவரும் வாயை பிள்ந்து காலி ஸ்ட்ரெச்சரை வெறிக்கிறார்கள்.