INT. ROOM – MINOR JAIL - NIGHT
இருட்டு. மந்த்மாய் வெளிச்சம். ரூம் நடுவே அகரன், அம்மனமாய் கம்பியில் கைகள் விரித்து யேசு போல் கட்டப்பட்டு.
வார்டன், வாயில் லாலிபாப், கையில் சவர கத்தி. அகரன் தலை முடியை பிடிக்கிறான். அகரன் திமிர்கிறான். உஸ்சு அகரன் கழுத்தை நெறித்து பிடிக்கிறான்.
கத்தி அகரன் தலை முடியை வழிக்கிறது. கத்தி முன்னும் பின்னும் வேகமாய் அகரன் தலையில் பாய்கிறது. முடி கீழே விழ, மண்டை பாதி வெளுப்பாய், மீதி சிவப்பாய் ரத்தத்தில்.
[அகரன்]
(வலியில்)
ஆஆஆஆஆ...
உஸ்சு அகரன் கழுத்தை அதிகமாய் நெறித்து பிடிக்கிறான். உட்ராச்ச் கொட்டை அறுந்து விழுகிறது.
வார்டன் விசிலடித்தபடி வேகமாய் அகரனை பேய்தனமாய் மொட்டை அடிக்கிறான். அகரன் மொட்டையில் ரத்தம் வழிகிறது.
[வார்டன்]
ச்சு ச்சு ச்சு ச்சு.. வலிக்தா?
வார்டன், உஸ்சு.. அகரன் மொட்டையை ரசித்து இளிக்கிறார்கள்.
[வார்டன்]
(ஊஸ்சிடம்)
சன்த்னம் எடு.
உஸ்சு விஸ்கி பாட்டிலை கொடுக்கிறான். வார்டன் இளித்தபடி விஸ்கி பாட்டிலை அகரன் தலையில் கவுக்கிறான்.
[அகரன்]
ஆஆஆஆ...
[வார்டன்]
குடிக்ற தண்ணிக்கு குண்டி காய்து.. ஒனக்கு பாரு, பாரின் தன்ணில அபிசேகம்.
வார்டன் உஸ்சை கண்ணடிக்கிறான். உஸ்சு இளிக்கிறான்.
"க்ளிக்". "வ்ரூம்".
ஹேர் ட்ரையர் அலறுகிறது. உஸ்சு அகரனிடம் வருகிறான்.
[வார்டன்]
ஒம்போதுது ..?
ரோஜாவை அகரன் காதில் சொறுகுகிறான். ட்ரையரை வாங்கி அகரன் காதிலிருக்கும் ரோஜாவை டோஸ்ட் செய்கிறான். ட்ரையர் சூட்டில் ரோஜா சிவப்பு மறைந்து.. லேசாய் கருப்பு.
அகரன் முகம் துடிக்க லேசாய் கண்கள் திறக்கிறது. வார்டன் ட்ரையரை அகரன் முகத்தில் ஓட்டுகிறான். வலியில் அகரன் முகம் துடிக்கிறது.
[அகரன்]
ம்மாஆஆ..
உஸ்சு அகரன் வாயில் டென்னிஸ் பாலை அடைக்கிறான். ட்க் டேப்பில் அகரன் வாயை பாலுடன் கட்டுகிறான். அகரன் வலியில் துடிக்க திமுறுகிறான்.
[வார்டன்]
ஒம்போது.. ம்ம்ம்..
"வ்ரூம் வ்ரூம் வ்ரூம்".. ட்ரையை சத்தம் அதிகமாகிறது.
அகரன் வலியில் துடிக்கிறான். வார்டன், உஸ்சு அட்டகாசம் சிரிப்பொலியில் ஜெயிலை பிளக்கிறது.
"வ்ரூம் வ்ரூம் வ்ரூம்"...
FADE OUT
BEGIN TITLES
அலறல்.. உயிரை கிழிக்கிறது.
மடிகிறது.
அமைதி
END TITLES
Saturday, October 11, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment