Sunday, November 2, 2008

INT. HIGH SECURITY CELL – CHENNAI CENTRAL JAIL – DAY

INT. HIGH SECURITY CELL – CHENNAI CENTRAL JAIL – DAY

சேரோடு கட்டபட்டு கைதி கண்களை மூடி மயக்கமாய். பல வருடங்களாக வெட்டப்படாத நீளமான கோர முடி, தாடி. அழுக்கு சாமியார் கோலம். கை, கால்களில் தடித்த சங்கிலி. சேரின் இரு புறம், இரண்டு போலிஸ், கையில் அவுட்டேட்டட் துப்பாக்கியுடன்.

சவர கத்தி பட்டையில் தேய்கிறது. மேலே. கீழே. வேகம் குறைகிறது.

[கான்ஸ்டபிள் 202]
ஸ்பீடா க்ளோஸ் பண்ணுயா.

சவரம் சவர கத்தியுடன் இவர்களிடம் வருகிறான்.

[சவரம்]
டொன்டி டொன்டியாது, இஸ்பீடா க்ளோஸ் பண்ண? டெஸ்ட் மேச்சுடா.
(கைதியை காட்டி)
த்த பார்.. துக்கு இப்ப கட்ட்ங்.. ஷேவிங். பொளப்பா த்து.

கைதி சேரில் தலை தொங்க போட்டு, அசையாமல். சவரம் கைதி தலை முடியில் கத்தி வைக்கிறான்.

[சவரம்]
(முகத்தை சுளித்தபடி)
ன்னா கப்பு.. கூவம் கெட்ருண்டா.

[கான்ஸ்டபிள் 101]
தெள்ஞ்சிர போறான். ஸ்பீடா முடியா.

[சவரம்]
தெள்ஞ்சா ன்னா?
(துப்பாக்கியை காட்டி)
த்துல, ஸ்பீடா சுடு.

சவர கத்தியை கைதி தலயில் வைத்து முடி வெட்டுகிறான். தலை முடி கத்தியை இடறுகிறது.

[சவரம்]
வேலைக்கே ஆவாது.. துக்லாம் கசாப்பு தான் லாய்க்கு.

கத்தியை போட்டு, பெரிய கத்தியை எடுக்கிறன். கைதி தலையில் வைத்து முடியை வெட்டுகிறான். முடி வழிந்து கீழே விழுகிறது. கத்தி மேலும் கீழும் முடியை மழிக்கிறது. கத்தி தலையில் பட்டு, தலை கீறி ரத்தம் வடிகிறது.

[கான்ஸ்டபிள் 202]
தெள்ஞ்ற போதுயா.

சவரம் முடி வெட்டுவதை நிறுத்துகிறான். இளிக்கிறான்.

[சவரம்]
ரீல் உடாத.. தெள்றத்தா? ப்டி கப்படிக்குது. பொண்ம்யா த்து. போணத்துக்கு மேக்க்ப் போட்றீங்க்ளடா.

"கும்".

சவரம் எகிறி நாலடி தள்ளி விழுகிறான். கைதி சங்கிலி உடைத்து, அசுரனாய் நிற்கிறான்.

கான்ஸ்ட்பிள் துப்பாக்கியை குறி வைக்கிறார்கள். கைதி மின்னலாய் பாய்ந்து துப்பாக்கியை உடைக்கிறான். கான்ஸ்டபிள் உறைகிறார்கள். கைதி திரும்பி சவரம் நோக்கி நடக்கிறான். சவரம் அருகே வந்து பிணமாய் முறைக்கிறான்.

சவரம் கீழே கிடக்கும் கத்தியை எடுத்து கைதி நோக்கி வீசுகிறான். மறு வினாடி கைதி சவரம் கழுத்தை பிடித்து தலைக்கு மேல் தூக்குகிறான். சவரம் முழி பிதுங்குகிறது.

போலிஸ் கைதி மேல் பாய்கிறார்கள். கைதி சவரத்தை இன்னும் மேலே தூக்குகிறான். சவரம் கண்கள் பிதுங்கி நாக்கு வெளியே தள்ளுகிறது.

"ப்ளக்".

கைதி தலையில் துப்பாக்கி தூளாகிறது. சவரம் கைதி பிடியிலிருந்து கீழே விழுகிறான். கைதி வேகமாய் திரும்பி போலிசை அசுரனாய் முறைக்கிறான்.

"கும்". "கும்".

கான்ஸ்டபிள் இருவரும் சுவரில் நொறுங்குகிறார்கள். கைதி அசுரனாய் நிற்கிறான்.

"விஷ்க்".

கத்தி கைதி பின் தொடையில் பாய்கிறது. கைதி வேகமாய் திரும்புகிறான்.

சவரம் ரத்த்ம் தோய்ந்த கத்தியுடன் வியர்வை மழையில் குளித்தபடி நிற்கிறான். கைதி கண்கள் சவரம் மேல். அதே அசுர முறைப்பு.

"ன்ங் னங் னங்"..

கத்தி தானாய் கீழே விழுகிறது. சவரம் கை, கால்கள் நடுக்கம் அதிகமாகிறது. கைதி கண்கள் சவரம் மேல். சவரம் கை நடுங்க கும்பிடுகிறான். கைதி முறைப்பு மறைகிறது.

கைதி கண்கள் மூடுகிறான். தியான் நிலையில்.

அமைதி.

"விஷ்க்".

கைதி கழுத்தில் சவரக்கத்தி கிழிக்கிறது. சதை கிழிந்து, ஜிப்பர் திறந்தது போல் பிளக்கிறது. ரத்த்ம் மெதுவாய் எட்டி பார்த்து, வேகமாய் பீய்ச்சியடிக்கிறது. கைதி மெதுவாய் சரிந்த்து தரையில் விழுகிறான்.

கான்ஸ்டபிள் கையில் ரத்த்ம் தோய்ந்த்த கத்தியுடன், சவரத்தை தூக்குகிறான். இன்னொரு கான்ஸ்டபிள் தலையை பிடித்தபடி மெதுவாய் எழுகிறான். கைதி கண்கள் மூடி, கழுத்தில் ரத்தம் லீக் செய்தபடி ரத்தக்குளத்தில் மிதக்கிறான்.

No comments: