EXT. LONELY BEACH HOUSE - ECR ROAD - DAY
காம்பவுண்ட் சுவர் உயரமாய் பெயிண்ட் உதிர்ந்து. இரும்பு கதவு பெரிதாய் துரு பிடித்து, ஜம்போ சைஜ் பூட்டுடன். வீடு தனியாய், பெரிதாய் கோட்டையை போல் கம்பீரம். வீட்டை சுற்றி புல் புதர்கள். கேட் வெளியே ஆட்டோ. அருகே துர்கா, கருப்பு க்ரேசுவேட் கவுனில். கேட்டில் பூக்கொத்தை வைத்து எழுகிறாள்.
துர்கா கண்களை மூட, கண்ணத்தில் கண்ணீர் கோடுகள் வழிகிறது. ஆட்டோ ட்ரைவர் ரவி (60, ஒரு காலுக்கு பதில் கட்டை தாங்கலாய்), துர்காவை அணைத்து கண்ணீரை துடைக்கிறார்.
[ரவி]
டைமாச்சு கேப்டன்.
துர்கா வீட்டை பார்த்தபடி விசும்புகிறாள். ரவி துர்காவை ஆறுதலாய் அணைக்கிறார்.
[ரவி]
(குரல் உடைய)
மற்ன்த்று கேப்டன்.
துர்கா "முடியாது" என்று தலையை அசைத்தபடி போட்டோவை காட்டுகிறாள்.
தேய்ந்த பழய ப்ளேக் & வொய்ட் போடோவில் சிறுவன் (அகரன்), சிறுமி.
போடோவில் அகரன் வெட்கமாய் ஒதுங்கி நிற்க, சிறுமி இவனை கட்டி பிடித்து சிரிக்கிறாள்.
ரவி போடாவை பார்த்த கணத்தில் அழுகை பெரிதாய் வெடிக்கிறது. கால் கட்டை கீழே சரிய, முகத்தை மூடி அடக்க முடியாமல் அழுகிறார். துர்கா போடோவில் அகரனை பார்த்தபடி விசும்புகிறாள். மறு வினாடி கண்களை துடைத்து, ரவியை ஆட்டோவில் உட்கார வைக்கிறாள்.
Sunday, November 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment