INT. HIGH SECURITY CELL - CENTRAL JAIL - DAY
ராஜிவ், (29), வெள்ளை முகம், இன்ஸ்பெக்டர் உடம்பு.
[ராஜிவ்]
ஓபன் த டோர்.
கான்ஸ்டபில்ஸ் 101, 202 ஒருவரை ஒருவர் பார்த்து முழிக்கிறார்கள்.
[ராஜிவ்]
(கத்தல்)
ஓபன் த டேம் டோர்.
101 ஓடி ஜெயில் கதவை திறக்கிறான். ராஜிவ் ஜெயில் உள்ளே வந்து சுற்றி பார்க்கிறான். பழுதடைந்த ஜெயில் சுவர் முழுதும் ஒரு இன்ச் இடைவெளி விடாமல் கிறுக்கல்கள். பல விதமான எழுத்துக்கள், வரைபடம், கோரமான ஓவியங்கள். சுவர் முழுக்க். சுவர் சோகம் வடிக்கிறது.
ராஜிவ் சுவரை பார்த்தபடி முன்னே வருகிறான். கால்கள் இடற, அதிர்ந்து கீழே பார்க்கிறான்.
தரையில் கைதி, அசையாமல். சுற்றி ரத்த குளம். ரத்தம் காய்ந்து, உறைந்து.
[ராஜிவ்]
(அதிர்ந்து)
ஷிட்.
(கான்ஸ்டபளிடம்)
கெட் த ஆம்புலன்ஸ்.
101, 202 ஒருவரை ஒருவர் பார்த்து முழிக்கிறார்கள்.
[ராஜிவ்]
(அலறல்)
கெட் த டேம் ஆம்புலன்ஸ்.
கான்ஸ்டபில்ஸ் வெளியே ஓடுகிறார்கள். ராஜிவ் கைதி கையை பிடித்து உயிர் நாடி பார்க்கிறான்.
Sunday, November 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment