Thursday, February 5, 2009

INT. AUTO – MARINA – DAY

INT. AUTO – MARINA – DAY

ஆட்டோ கச்சி கும்பல் நடுவே. துர்கா ட்ரைவர் சீட்டில் ஹார்ன் அடிக்கிறாள். கும்பல் கோஷத்தில் ஹார்ன் சத்தம் கரைந்து போகிறது.

[துர்கா]
பெர்சு.. க்ரேசுவேசன்...

நெற்றியில் நாமம் போடும் சைகை காட்டுகிறாள். ரவி கால் கட்டையுடன் ஆட்டோவிலிருந்து இறங்குகிறார். சுற்றி கும்பலை நோட்டமிடுகிறார். கும்பல் கச்சி கொடியை தலைக்கு மேல் பிடித்தபடி கூச்சல் போடுகிறது.

[ரவி]
த்து நம்ம பார்ட்டில்ல கேப்டன். எதிர் கச்சி. மகா வெட்டி கும்பல் கேப்டன் த்து.. வண்டிய குடு.

துர்கா ட்ரைவர் சீட்டிலிருந்து கீழே இறங்குகிறாள். ரவி ட்ரைவர் சீட்டில் அமர்கிறார்.

[துர்கா]
வாட் டு தே வாண்ட்? ஏன் ப்டி கத்றானுங்க, பெர்சு?

[ரவி]
கச்சின்ற பேர்ல கும்பல் சேன்துக்னு, நாட்ட எச்சி பண்றானுங்க பொறுக்கிங்க.

துர்கா ரவியை முறைக்கிறாள்.

[ரவி]
அய்யியோ.. நம்ம கச்சில்ல கேப்டன். வ்வனுங்க...

துர்கா ரவியை முறைக்கிறாள். முறைப்பில் போலித்தனம்.

[ரவி]
(தலையை சொறிந்தபடி, மெதுவாய்)
எதிர் கச்சி.. கேப்டன்.

துர்காவின் போலி முறைப்பு படி படியாய் குறைந்து, குப்பென்று சிரிக்கிறாள். ரவி துர்காவுடன் சேர்ந்து சிரிக்கிறார்.


EXT. AMBULANCE - MARINA - DAY

ராஜிவ் கும்பல் நடுவே ரிவால்வரை வானத்தை நோக்கி காட்டியபடி அலர்ட் பொசிஷனில் நிற்கிறான். ராஜிவ் அருகே 101, 202.

[ராஜிவ்]
லாஸ்ட் வார்னிங். ஆம்புலன்சுக்கு வழி விட்லனா ஷூட் பண்ண எல்லா ரைட்சும் இருக்கு.

[கும்பல்]
சுடுய்யா. தலிவினியே ராவோட் ராவா அம்கீட்டீங்க. சுடு. தலிவன் களி துன்ருத்துக்குல்லோ பாடைல்ல போற்து மேல்.
(கோஷம்)
போலிஸ் அராஜகம், ஒழிக. போலிஸ் அடக்குமுறை, டவுன் டவுன்.

கூட்டம் புது அமளி காட்டுகிறாது. கும்பல் நெறிசல் அதிகமாகிறது. ஆம்புலன்ஸ் கூட்ட நெறிசலில் லேசாய் ஆடுகிறது.

[ராஜிவ்]
(கான்ஸ்டபளிடம்)
கால் பார் பேக்க்ப்.

கான்ஸ்டபில்ஸ் 101, 202 இருவரும் ஜீப்பை நோக்கி ஓடுகிறார்கள்.


INT. AUTO - MARINA - DAY

ஆட்டோ இரு பக்கமும் கச்சி கொடியுடன் கும்பலில் மெதுவாய் ஊர்கிறது. சற்று முன்னே கும்பல் அதிகமாக, ஆட்டோ கும்பலில் நகர முடியாமல் நிற்கிறது.

[கும்பல்]
(கோஷம்)
தன்மான தலைவனை, விடுதலை செய். தங்க தமிழனை, விடுதலை செய்.

துர்கா கீழே இறங்குகிறாள். தொடர்ந்த்து ரவி. கும்பலில் ஒல்லியாய் ஓமக்குச்சி ஸ்டைலில் ஒருவன் கச்சி கொடியுடன் வேகமாய் நடக்கிறான்.

[துர்கா]
(ஒல்லியிடம்)
யோ தியாகி.

கும்பலிலுருந்து ஒல்லி துர்காவிடம் வருகிறான். கையில் கச்சி கொடி. துர்கா ஒல்லியிடம் "என்ன?" என்று சைகை சைகிறாள்.

[ஒல்லி]
(கச்சி கொடியை அசைத்தபடி, கீச்சு குரலில்)
போராடுவோம், போராடுவோம்..

துர்கா, ரவி இருவரும் சிரிப்பை அடக்குகிறார்கள்.

[துர்கா]
த்து ன்ன போராட்டமா, ல்ல சில்ட்ரன்ஸ் பேரா?

[ஒல்லி]
(கீச்சு குரலில்)
எங்க கொரல் கோட்டைய உலுக்கும். நாட்ட பிளக்கும்.

[துர்கா]
(சிரிப்பை அடக்கியபடி)
ஒன் கொரல்?

[ஒல்லி]
(கீச்சு குரலில்)
தன்மான சிங்கம் எங்க தலைவன் வெள்ல வரப்ப தெரியும், எங்க பவர்.

[ரவி]
ஒன் கொர்ல கேட்டு சிங்கம் வெள்ல வந்த மாதிரி தான்.

துர்கா சிரிப்பை அடக்க் முடியாமல் சிரிக்கிறாள். ஒல்லி கண்கள் சிவக்கிறது.

[ஒல்லி]
(கீச்சு குரலில்)
ஏய், ன்னா.. தலைவன அசிங்கபத்த்ற? பொம்ப்லியாச்சன்னு பாக்றன்.

துர்கா சிரிப்பு மறைந்து, ஒல்லியை முறைத்தபடி தன் கை முட்டியை இறுக்குகிறாள். ரவி இவர்கள் நடுவே நுழைந்து, துர்காவை பார்த்து "வேண்டாம்" என்று தலை அசைக்கிறார்.

[ரவி]
(ஒல்லியிடம்)
ன்னாத்துக்கு டென்சன். ஒரே கச்சி, தலிவன வுட சொல்லி ஒன்னா கொர்ல்லுடுவோம். உட்ட்டு.

ரவி ஆட்டோ சைடில் கட்டிய கொடியை கழற்றி வேகமாய் அசைக்கிறார். துர்கா செல் போனை எடுத்து, பட்ட்னை தட்டுகிறாள். செல் போனில் பூபதி சிரிக்கிறார். செல் "டய்லிங்" என்று அபினயம் காட்டுகிறது.

No comments: